உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  விவசாயிகள் முகாம்

 விவசாயிகள் முகாம்

மேலுார்: உறங்கான்பட்டியில் வேளாண் துறை சார்பில் விஞ்ஞானிகள், விவசாயிகள் மற்றும் விரிவாக்க பணியாளர்கள் இணைப்பினை வலுப்படுத்தும் முகாம் நடந்தது. வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி சுரேஷ்குமார், வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தன், ஓய்வு பெற்ற அலுவலர் மகாராஜன், துணை, உதவி வேளாண் அலுவலர்கள் பாஸ்கரன், சுகிர்தா உள்ளிட்டோர் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை, வேளாண் துறையில் உள்ள மானியத் திட்டங்கள், உரமேலாண்மை, நுண்ணீர் பாசன திட்டம், நில உடைமை குறித்து விளக்கினர். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மருது பாண்டித்துரை, சிவரஞ்சனி செய்திருந்தனர். தொழில்நுட்ப மேலாளர் ராபின் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !