உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  துார்ந்த கால்வாயால் சோர்ந்த விவசாயிகள்

 துார்ந்த கால்வாயால் சோர்ந்த விவசாயிகள்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரையில் உபரிநீர் கால்வாய் துார்வாரப்படாததால் விவசாயம் பாதிப்பதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அப்பகுதி மார்நாட்டான் கூறியதாவது: இங்கு புதுப்பட்டி மயானத்தின் அருகே வெளியேறும் உபரி நீர் கால்வாய் முள்ளிப்பள்ளம், தென்கரை வழியே சென்று கச்சிராயிருப்பு அருகே நிலையூர் கால்வாயில் சேருகிறது. தென்கரை, மன்னாடிமங்கலம் கண்மாய்களில் இருந்து வெளியேறும் பாசன உபரிநீர், இக்கால்வாய் வழியே செல்கிறது. முள்ளிப்பள்ளம் ஊத்துக்கால் பாசன நிலங்களுக்கு முக்கிய ஆதாரமாக இக்கால்வாய் உள்ளது. இது 10 ஆண்டுகளாக துார்வாரப்படாமல் செடி, கொடிகள் முளைத்து கால்வாயை தேடும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் பல ஆண்டுகளாக நெல் பயிரிடாமல் வாழை, வெற்றிலை பயிரிடு கின்றனர். தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்வதால் மண்வளம் பாதிக்கும் நிலை உள்ளது. கால்வாய் துார்வாரப்பட்டால்தான் இங்கு நெல் பயிரிட முடியும். இதனால் ஐந்து ஆண்டுகளாக பல ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறியுள்ளன. அதிகாரி களிடம் தெரிவித்தும் அலட்சியம் காட்டுகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை