உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்

மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்

உசிலம்பட்டி : விவசாயப்பணிகளை துவக்குவதற்காக காத்திருக்கும் மானாவாரி விவசாயிகள் மழை தாமதமாவதால் கவலையடைந்துள்ளனர். உசிலம்பட்டி, எழுமலை பகுதிகளில் ஆடிப்பட்டத்திற்கு முன்பாக போதுமான மழை இல்லாமல் போனதால் மானாவாரி நிலங்களில் உழவுப்பணிகள் நடப்பது தாமதமடைந்துள்ளது. ஆடிப்பட்டத்தின் போதும் உழவு செய்யுமளவுக்கு மழை கிடைக்கவில்லை. இதனால் உசிலம்பட்டி வட்டாரத்தில் சாகுபடி பணிகளே நடக்கவில்லை. ஆக. 18, க்குப்பின் கிடைத்த மழையை வைத்து மானாவாரி நிலங்களில் உழவுப்பணி தற்போது நடக்கிறது. பெரும்பாலான நிலங்களில் உழவுப்பணி நடக்காமல் உள்ளது. அல்லிகுண்டம், மானுாத்து, ஜோதில்நாயக்கனுார் பகுதிகளில் மழையை எதிர்பார்த்து உழவுப்பணியுடன் பருத்தி, குதிரைவாலி பயிர்களுக்கான விதைகளை விதைத்துள்ளனர். அடுத்தடுத்து பெய்யாமல் மழை தாமதமாவதால் மானாவாரி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ