உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகளுக்கு மின்இணைப்புகளை வரும் மார்ச் 31க்குள் வழங்கி விட வேண்டிய கட்டாயம்

விவசாயிகளுக்கு மின்இணைப்புகளை வரும் மார்ச் 31க்குள் வழங்கி விட வேண்டிய கட்டாயம்

தமிழகத்தில் விவசாய மின்இணைப்புகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. முன்னுரிமை கோருவோர், தட்கல் முறையில் விண்ணப்பிப்போர் கட்டணம் செலுத்தி பெறுகின்றனர்.இவ்வகையில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்குவதில் இலக்கு நிர்ணயித்து அவற்றை எட்டும் வகையில் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.கடந்தாண்டு(2023 - 24) மார்ச் 31 வரைக்கும் நிலுவையில் இருந்த 276 மின்இணைப்புகளை வழங்க இந்தாண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.இதையடுத்து அதிகாரிகள் விண்ணப்பங்களை பெற்று பரிசீலித்து இணைப்பு வழங்கி வந்தனர்.இதன்படி இலவச இணைப்பு 37 பேருக்கும், ரூ.25 ஆயிரம் கட்டணத்தில் 13 பேர், ரூ.50 ஆயிரம் கட்டணம் செலுத்தியோர் 7 பேர், தாட்கோ அமைப்பின் மூலம் 8 பேர், ஆதரவற்றோர், விதவை, முன்னாள் ராணுவத்தினர் என முன்னுரிமை பட்டியலில் உள்ளோர் 17 பேர், தட்கல் முறையில் 159 பேருக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மீதியுள்ளோருக்கும் மின்இணைப்பு வழங்குவதில் அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.இந்த இணைப்புகளை வரும் மார்ச் 31க்குள் வழங்கி விட வேண்டிய கட்டாயம் உள்ளதால் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் மின்கம்பங்களை நடுவது, மின்கம்பிகளை இழுப்பது, புதிய டிரான்ஸ்பார்மர்களை பொருத்துவது என பம்பரமாக சுழன்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Subash BV
மார் 11, 2025 13:01

FIRST ANOUNCE THERE WILL BE NO SUITCASES POLITICS IN THE POWER MINISTRY. THINK SERIOUSLY.


தமிழன்
மார் 10, 2025 14:49

மொத்தமாகவே நீங்கள் கூறிய கணக்குப்படி 500 மின்னிணைப்புகள் கூட தேறவில்லையே ஆனால் வருடம் 50 ஆயிரம் விவசாயம் மின் இணைப்பு கொடுக்கப்படுவதாக அமைச்சர் பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறாரே. 2022 ஆம் ஆண்டு மின் இணைப்பு கொடுப்பதாக கடிதம் அனுப்பிய எனக்கே இதுவரை மின் இணைப்பு கொடுக்கவில்லை 77 ஆயிரம் ரூபாய் கட்டணமாக அரசுக்கு செலுத்தி விட்டு காத்துக் கொண்டிருக்கிறேன்.


NANTHAKUMAR NANTHU
மார் 10, 2025 21:23

நான் 50,000 கட்டணம் செலுத்தி பெறும் மின் இணைப்பு ரூபாய் 1,15,000 செலுத்தி காத்து இருக்கிறேன் மின் அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது 31/03/2015 வரை விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே மின் இணைப்பு தருவதாக கூறியுள்ளார் ஆனால் நான் 05/09/2105 ல் விண்ணப்பித்து காத்து கொண்டு இருக்கேன்...


visu
மார் 10, 2025 06:38

சைடு வருமானம் இல்லாமல் பம்பரமாக சுழலுவர்களா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை