உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வெள்ளை ஈயை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி

வெள்ளை ஈயை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி

மதுரை: மதுரை வேளாண் அறிவியல் நிலையம், தோட்டக்கலைத்துறை சார்பில் திருப்பரங்குன்றம் கொடிக்குளத்தில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி, செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.மதுரை வேளாண் கல்லுாரி பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் சுரேஷ் கூறுகையில், ''திருப்பரங்குன்றத்தில் 690 எக்டேரில் தென்னை சாகுபடியாகிறது. தென்னை அடி மட்டைகளின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தல், மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி, ஒட்டுண்ணி, இரைவிழுங்கியின் செயல்பாடு, பூஞ்சான தாக்குதலை கட்டுப்படுத்த மைதா மாவு கரைசல் தெளிப்பு போன்ற ஒருங்கிணைந்த முறைகளை கையாள வேண்டும்'' என்றார். தோட்டக்கலை உதவி இயக்குநர் கோகிலா சக்தி, உதவி தோட்டக்கலை அலுவலர் பேபி சாலினி ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ