உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குறைதீர் கூட்டம் ரத்தால் விவசாயிகள் அதிருப்தி

குறைதீர் கூட்டம் ரத்தால் விவசாயிகள் அதிருப்தி

திருமங்கலம்; விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் 2வது செவ்வாய்க்கிழமை திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெறும். நேற்று நடந்த கூட்டத்திற்கு விவசாயிகள் ஏராளமானோர் வந்திருந்தனர். அதேசமயம் கூட்டத்தை நடத்த வேண்டிய தாசில்தார் உள்பட அதிகாரிகள் யாரும் வரவில்லை. விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். பொறுமையிழந்த அவர்கள் அலுவலக வாயிலில் முற்றுகையிட்டனர். இதையடுத்து வருவாய் துறையினர் இன்றைய கூட்டம் புதன்கிழமை (ஆக.13) நடைபெறும் என தெரிவித்தனர். முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் திடீரென கூட்டம் ரத்து என அறிவித்ததால் விவசாயிகள் கடும் அதிருப்தியடைந்தனர். விவசாயிகள் கூறும் போது, ''விவசாயிகளுக்கென உள்ள வாட்ஸ்ஆப் குழுவில் தகவல் தெரிவித்து இருக்கலாம். வேலையை விட்டுவிட்டு வந்தது வீணாகிப் போனது. அதிகாரிகள் தரப்பில், ''உச்சபட்டியில் முகாம் நடந்ததால் அதிகாரிகள் பலரும் அங்கு சென்று விட்டதால் ரத்தானதாக'' தெரிவித்தனர். வாடிப்பட்டி வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், வேளாண் உதவி இயக்குனர் பாண்டி, தோட்டக்கலை துறை துணை அலுவலர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். ஆர்.ஐ., ராஜா வரவேற்றார். தாதம்பட்டி மந்தையில் உள்ள பழுதான பள்ளி கட்டடங்களை அகற்றுதல், கோட்டைமேடு- நரிமேடு பெரியாறு பாசன கால்வாய் பாலத்தை விரிவுபடுத்துதல், எட்டிகுளம் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பழுதான ஷட்டர்களை சீரமைத்தல், வைகை பாசன நீரை சாத்தையாறு அணையுடன் இணைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர். விவசாய சங்கத் தலைவர் ஜெயரட்சகன் நன்றி கூறினார். ஊருணிகளை கண்டுபிடிங்க... திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் ராஜராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. விவசாயிகள் பாண்டி, லட்சுமணன், மகாமுனி, பேயத்தேவர், பாலமுருகன் ஆகியோர், தென்கால் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாக்க வேண்டும். இக்கண்மாயை சுற்றி இருந்த 9 ஊருணிகள், கால்வாய்களை கண்டுபிடிக்க வேண்டும். நிலையூர் பெரிய கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தோப்பூர் ஊருணியை அளவீடு செய்து அதை காக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !