உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காய்கறிகள் விலை சரிவு கவலையில் விவசாயிகள்

காய்கறிகள் விலை சரிவு கவலையில் விவசாயிகள்

திருப்பரங்குன்றம்: கத்தரி, மிளகாய், தக்காளி, வெண்டை, முருங்கைக்காய் விலை வெகுவாக குறைந்து விட்டதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை பயிரிட்டுள்ளனர். இவற்றின் விலை தற்போது குறைந்து விட்டதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.விவசாயிகள் சிவராமன், பாண்டி, கிழவன்சாமி, வேல்முருகன், மெய்ராஜன் கூறியதாவது: காய்கறி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் செலவு செய்துள்ளோம். தற்போது மிளகாய் கிலோ ரூ.5 முதல் ரூ.10, கத்தரி ரூ.8, தக்காளி ரூ.5, வெண்டை ரூ. 12, முருங்கைக்காய் ரூ. 20க்கு விலை போகிறது. இந்த விலை சரிவால் எடுப்பு கூலி, வண்டி வாடகை, கமிஷன், ஏற்று இறக்கு கூலிக்குகூட வருமானம் கிடைக்கவில்லை. மாறாக நஷ்டம் ஏற்படுகிறது.காய்களை பறிக்கவில்லையெனில் செடிகளை காப்பாற்ற முடியாது. அதனால் அவற்றைப் பறித்து ஆடு, மாடுகளுக்கு உணவாகவும், குப்பையிலும் கொட்டுகிறோம். இதனால் இந்தாண்டு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.காய்கறிகள் விலைகள் உயரும் போது அரசு சார்பில் பசுமை கடைகள் திறக்கின்றனர். விலை குறைந்து விட்டால் அரசு கவலைப்படுவதில்லை. கரும்பு, நெல்லுக்கு அரசு ஆதார விலை நிர்ணயித்துள்ளது போல காய்கறிகளுக்கும் நிரந்தர விலை நிர்ணயித்தால் மட்டுமே விவசாயிகளை காப்பாற்ற முடியும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை