குழந்தைக்கு விஷம் தந்தை தற்கொலை
பாலமேடு: தேவசேரி பாண்டி 32, 'டைல்ஸ்' ஒட்டும் தொழிலாளி. இவருக்கு நத்தம் பகுதி ஜெயப்பிரியாவுடன் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. மது போதையில் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பாண்டி தனது 2 வயது பெண் குழந்தைக்கு பாலில் விஷம் கொடுத்தார். மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை சிகிச்சையில் உள்ளது. நேற்று காலை தோட்டத்தில் பாண்டி துாக்கிட்டு தற்கொலை செய்தார். பாலமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.