உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அனிமல் பாஸ் ஓவர் இறுதி கட்ட பணிகள்

அனிமல் பாஸ் ஓவர் இறுதி கட்ட பணிகள்

வாடிப்பட்டி: வாடிப்பட்டி - - தாமரைப்பட்டி இடையே நான்குவழிச் சாலையாக அமைகிறது 'அவுட்டர் ரிங் ரோடு'. இது வாடிப்பட்டி அருகே கொண்டையம்பட்டி, பூச்சம்பட்டி இடையே வகுத்து மலை, வண்ணாத்திக் கரடு நடுவே செல்கிறது. இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது.இதனால் அவை வாகனங்களின் இடையூறின்றி மலைகளுக்கு இடையே கடந்து செல்ல தமிழகத்தின் முதல் 'அனிமல் பாஸ் ஓவர்' மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது. அதற்கு தமிழக வனத்துறை 2022ல் அனுமதி வழங்கியது. இதையடுத்து துவங்கிய மேம்பால பணிகள் தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.பாலம் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் பாலத்தின் இருபுறமும் மலையுடன் இணைக்க இயந்திரங்கள் மூலம் மண் நிரப்பி வருகின்றனர். சாலையின் நடுவே சென்டர் மீடியனில் செடிகள் நடவு செய்து வருகின்றனர். பாலத்தில் ஒலி, ஒளி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை