ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதி மரியாதை
எழுமலை: எழுமலை அருகே பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கோட்டை மலைப்பாண்டி சிந்து பெரிய காரி என்ற ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்தார். பாப்பிநாயக்கன்பட்டி, அலங்காநல்லுார், பாலமேடு உள்ளிட்ட பகுதி ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்ற இந்த காளை எங்குமே பிடிபட்டதில்லை. வெற்றி பெறும் வீரக்காளையாக பீரோ, கட்டில், தங்கக் காசு என பரிசுகளை பெற்றுள்ளது.சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவதியுற்று வந்த இந்தக் காளை நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தது. கிராமத்திற்கு பெருமை சேர்த்த காளை உயிரிழந்ததால் சோகத்தில் மூழ்கிய மக்கள் காளையின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர். உறவினர் இறந்தது போல பந்தல் அமைத்து, மேள, தாளத்துடன், மைக்செட் அமைத்து சோகப்பாடல்களை ஒலிபரப்பினர். பின்னர் மலைப்பாண்டியின் தோட்டத்திலேயே அடக்கம் செய்தனர்.