முதல்வர் கோப்பையில் முதலிடம்
அழகர்கோவில்: மதுரை ரேஸ்கோர்ஸில் நடந்த பள்ளி மாணவிகளுக்கான முதல்வர் கோப்பை கைப்பந்து போட்டியில், அழகர் கோவில் சுந்தரராஜா பள்ளி மகளிர் அணியினர் முதலிடம் பெற்று, ரூ.42 ஆயிரம் பரிசு வென்றனர். பீச் வாலிபால் போட்டியிலும் முதலிடம் பெற்று ரூ.6 ஆயிரம் பரிசு வென்றனர். வெற்றி பெற்ற மாணவி களை மண்டல இணை கமிஷனர் மாரியப்பன், கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், தலைமை ஆசிரியர் செல்வ ராஜ், உடற்கல்வி ஆசிரியர் மச்சராஜா, கைப்பந்து அணி ஆலோசகர் ராஜேந்திரன், பயிற்சியாளர் லோகு, பிரபு பாராட்டினர். போட்டியில் வென்ற வர்கள் மாநில போட்டி களுக்கு தகுதி பெற்றனர்.