மதுரையில் சிறுமியிடம் சில்மிஷம் உணவு டெலிவரி இளைஞர் கைது
மதுரை: மதுரையில் உணவு டெலிவரி செய்ய வந்த இடத்தில் 10 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.மதுரை ஆரப்பாளையம் ஆண்டனி டேவிட்ராஜ் 28. பிரபல உணவு டெலிவரி நிறுவன ஊழியர். 10 நாட்களுக்கு முன் ஆண்டாள்புரம் பகுதியில் ஒரு வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய சென்றார். அங்கு பொள்ளாச்சியைச் சேர்ந்த 10 வயது சிறுமி உறவினரின் வீட்டில் தங்கி இருந்தார். அவரிடம் உணவு கொடுக்கும்போது சில்மிஷத்தில் ஈடுபட்டு இளைஞர் தப்பிச்சென்றார்.உறவினரிடம் சிறுமி தெரிவித்தார். கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைக்க திட்டமிட்டிருந்த நிலையில், நேற்றுமுன்தினம் மீண்டும் உணவு கொடுக்க அதே பகுதிக்கு வந்த இளைஞர் குறித்து சிறுமி தகவல் தெரிவித்தார். அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை அனைத்து தெற்கு மகளிர் போலீசார் 'போக்சோ' வழக்கில் கைது செய்தனர்.