உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உணவுத்தர நிர்ணய சட்டத்திலும் ஜி.எஸ்.டி., போன்று ஒரே உரிமம் உணவுப் பொருள் வியாபாரிகள் வலியுறுத்தல்

உணவுத்தர நிர்ணய சட்டத்திலும் ஜி.எஸ்.டி., போன்று ஒரே உரிமம் உணவுப் பொருள் வியாபாரிகள் வலியுறுத்தல்

மதுரை : 'ஜி.எஸ்.டி.,யில் இருப்பது போன்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்திற்கும் ஒரே உரிமம், ஒரே முறையை அமல்படுத்த வேண்டும்' என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இந்த அமைப்பின் தலைவர் வேல்சங்கர், செயலாளர் சாய் சுப்ரமணியன், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் ஆகியோர் உணவுப் பாதுகாப்புத் துறை தலைமை செயல் அதிகாரி கமலவர்த்தன ராவை சந்தித்து வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்தில் கரும்பு, வெல்லம், கருப்பட்டிக்கு மறுதரம் நிர்ணயம் செய்ய வேண்டும். சீனிகலந்த வெல்லம், சீனி கலந்த கருப்பட்டியை தனிப்பொருளாக அங்கீகரித்து, தரநிர்ணயம் செய்ய வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரியில் உள்ளது போல ஒரே உரிமம் ஒரே முறையை அமல்படுத்த வேண்டும்.இச்சட்டத்தில் உரிமம் புதுப்பிக்கும் காலத்தை நிதியாண்டு துவக்கமான 'ஏப்ரல்' என மாற்றி அமைக்க வேண்டும். ஆய்வுக்காக உணவுப் பொருளின் மாதிரி எடுக்கும் போது குறைகள் இல்லையெனில் அதற்கு சான்றிதழ் வழங்க வேண்டும். விளைபொருட்களை ஆய்வு செய்து, தற்போதைய தட்பவெப்ப நிலைக்கேற்ப புதிய தரம் நிர்ணயிக்க வேண்டும். இத்துறையில் மாற்றங்களை ஆண்டு துவக்கத்தில் கொண்டு வரவேண்டும்.உணவு மாதிரியில் குறையிருந்தால் 4வது மாதிரியை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்ப உயர்த்திய கட்டணம் ரூ.15 ஆயிரத்தை ரூ.2 ஆயிரமாக மாற்ற வேண்டும். புளியின் தரத்தை மறுநிர்ணயம் செய்ய வேண்டும். உணவுப்பொருளுக்கான லேபிளை அச்சிடும் முன், அதிகாரிகள் சரிபார்த்துக் கொடுக்கும் நடைமுறையை உருவாக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி