மேலும் செய்திகள்
மருமகள் கல்லீரல் தானம் மாமியாருக்கு மறுவாழ்வு
11-Jan-2025
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக 42 வயது ஆணுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.டீன் அருள் சுந்தரேஷ்குமார் கூறியதாவது: மதுரை ஆயுதப்படை போலீஸ்காரர் மோகன்குமார் மரத்தில் இருந்து விழுந்து அடிபட்டதில் பிப். 5ம் தேதி மூளைச்சாவு அடைந்தார். அவரிடம் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், கருவிழிகள், எலும்பு, தோல், இதயம் ஆகியவை தானமாக பெறப்பட்டது. ஒரு சிறுநீரகம் 22 வயது நோயாளிக்கு பொருத்தப்பட்டது. இங்கேயே கல்லீரல் தேவைக்காக மதுரையைச் சேர்ந்த 42 வயது ஆண் காத்திருந்த நிலையில் அவருக்கு பொருத்த முடிவு செய்தோம்.சென்னை ராஜிவ் காந்தி, ஸ்டான்லி மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு வெளியில் இருந்து டாக்டர்கள் வந்து அறுவை சிகிச்சை செய்வர். முதன்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் இங்குள்ள டாக்டர்களே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தது சாதனையான விஷயம் என்றார்.குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை பிரிவு பேராசிரியர் கார்த்திகேயன் கூறியதாவது: கல்லீரலில் சிறிய ரத்தக்குழாய்கள் தான் உள்ளது. நோயாளிக்கு பொருத்துவதற்கு முன்பாக கல்லீரலில் மட்டும் ஒன்றரை மணி நேரம் தனியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதன்பின் நோயாளிக்கு பொருத்தும் போது கல்லீரல் சுரக்க ஆரம்பித்து பித்தநீர் வெளியே வர வேண்டும். நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு துவங்கிய அறுவை சிகிச்சை இரவு 8:00 மணிக்கு முடிந்தது. நோயாளி நலமுடன் உள்ளார். 5 நாட்கள் கண்காணிப்பிற்கு பின் 'டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றார்.குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் பத்மநாபன், டாக்டர்கள் சாஸ்தா, வில்லாளன், பாலமுரளி, மருத்துவப் பிரிவு துறைத்தலைவர் கண்ணன், டாக்டர் ரமணி, மயக்கவியல் துறைத்தலைவர் கல்யாணசுந்தரம், டாக்டர்கள் வைரவராஜன், சண்முகசுந்தரம், செந்தில்குமார், பாலமுருகன், ரமேஷ், பிரமோத், முரளி, நர்ஸ்கள் ஜோதி, விஜயலட்சுமி குழுவினர் அறுவை சிகிச்சையின் போது உடனிருந்தனர்.
11-Jan-2025