கட்டாய கருத்தடை சிகிச்சை
ஜக்தல்பூர் : சத்தீஸ்கரில், சரணடைந்த மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் அமைப்புகளை சேர்ந்தவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சந்தித்து பேசினார். அப்போது, மாவோயிஸ்ட் அமைப்புகளை சேர்ந்த ஆண்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் அவர்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக தெலுங்கானாவை சேர்ந்த சரணடைந்த மவோயிஸ்ட் ஒருவர் தெரிவித்தார்.குழந்தை பெற்றுக் கொண்டால் குடும்பத்துடனான பிணைப்பு அதிகரிக்கும் என்பதால் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.