உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அ.தி.மு.க., ஆட்சிக்காக மக்கள் ஓரணியில் திரண்டுள்ளனர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் மகிழ்ச்சி

அ.தி.மு.க., ஆட்சிக்காக மக்கள் ஓரணியில் திரண்டுள்ளனர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் மகிழ்ச்சி

உசிலம்பட்டி: 'அ.தி.மு.க., ஆட்சிக்காக மக்கள் ஓரணியில் திரண்டுள்ளனர்' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார்.உசிலம்பட்டி ஜோதில்நாயக்கனுார் கிராமத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு கோயிலில் வழிபாடு, அன்னதானம், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் பங்கேற்றார்.அவர் பேசியதாவது: ஆட்சியாளர்கள் அரசர்கள் போலவும், நாம் அடிமைகள் போலவும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். எதைக் கேட்டாலும் பதில் இல்லை. ஓர் அணியில் திரளுவோம் என்கிறார்கள். ஆனால் மக்களோ அ.தி.மு.க., ஆட்சி வேண்டும் என ஓரணியில் திரண்டுள்ளனர்.ஒவ்வொரு திட்டம் மூலமும், தி.மு.க.,வின் மூத்த தலைவர்கள் மக்களை கொச்சைப்படுத்தி வருகின்றனர். சொத்துவரி, மின் கட்டண உயர்வை ரத்து செய்யச் சொன்னால், காமராஜர் ஏ.சி., இல்லாமல் துாங்க மாட்டார் என புதுக் கதையை சொல்கின்றனர்.இன்று அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களை முடக்கி வைத்து விட்டனர். முதல்வர் ஸ்டாலின் எத்தனை புதிய மருத்துவமனை, எத்தனை புதிய மாவட்டங்களை கொண்டு வந்தார். வீட்டிற்குச் செல்லும் போது உங்களுடன் ஸ்டாலின் என்கிறார். நான்கு ஆண்டுகளாக எங்கே இருந்தீர்கள் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ