உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை - கயத்தாறு நெடுஞ்சாலையில் ரூ.111 கோடியில் நான்கு சுரங்கப்பாதை

மதுரை - கயத்தாறு நெடுஞ்சாலையில் ரூ.111 கோடியில் நான்கு சுரங்கப்பாதை

சென்னை: மதுரை - கயத்தாறு தேசிய நெடுஞ்சாலையில், நான்கு இடங்களில் உள்ள விபத்து கரும்புள்ளி பகுதிகளில் வாகன சுரங்கப்பாதைகள், 111 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துகள் நடக்கும் இடங்கள் கரும்புள்ளி பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்தில் உள்ள கரும்புள்ளி பகுதிகளில், நிரந்தர சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, பல்வேறு சாலைகளில் விபத்து கரும்புள்ளி பகுதிகளில், மேம்பாலங்கள், கீழ்பாலங்கள், சுரங்கப்பாதைகள் கட்டுமானம், சந்திப்புகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. மதுரை - கயத்தாறு இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், இவ்வாறு நான்கு இடங்களில் விபத்து கரும்புள்ளி பகுதிகள் உள்ளன. அவற்றில், நான்கு வழி வாகன நுழைவு சுரங்கப்பாதைகள் அமைப்பதற்கு, மத்திய அரசு 111 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியில், சுரங்கப்பாதைகள் கட்டுவதற்கான ஏற்பாடுகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்ததாரர் தேர்வு, செப்டம்பர் 27ம் தேதி நடக்கவுள்ளது. கட்டுமான பணிகளை 548 நாட்களில் முடிக்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Elangovan T
ஆக 16, 2025 19:24

திருச்சி-திருநெல்வேலி, தூத்துக்குடி 4 வழிச்சாலைகளில் பல்வேறு இடங்களில் ஆனால் முக்கியமான சந்திப்பான மதுரை ஒத்தக்கடை சந்திப்பு கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளது. அங்கு மேம்பாலம் அவசியம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை