உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி ஆவணம் தயாரித்து முறைகேடு

கூட்டுறவு கடன் சங்கத்தில் போலி ஆவணம் தயாரித்து முறைகேடு

மேலுார்: உறங்கான்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வாடிக்கையாளர்கள் பெயரில் போலி ஆவணம் தயாரித்து முறைகேடு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இச்சங்கத்தில் இருந்து பொற்கிளி அம்மன் மகளிர் குழுவின் உறுப்பினர்கள் 12 பேருக்கு அக்.27 ல் நோட்டீஸ் வந்தது. அதில் சுயஉதவி குழு கடன் தொடர்பாக விசாரிக்க உள்ளதாக விசாரணை அலுவலர் தங்கலட்சுமி தெரிவித்திருந்தார்.பாதிக்கப்பட்ட சகுந்தலா கூறியதாவது: பொற்கிளி அம்மன் என்ற பெயரில் சுய உதவி குழு நாங்கள் துவங்கவே இல்லை. எங்கள் 12 பேர் பெயரில் போலியான ஆவணம் தயாரித்து முறைகேடாக பணத்தை எடுத்துள்ளனர். தற்போது விசாரணை அதிகாரி அக். 24 வரச்சொல்லி அனுப்பிய நோட்டீசை அக். 27ல் காலதாமதமாக கிடைக்குமாறு கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகள் அனுப்பி உள்ளனர். நேரில் சென்று விசாரித்தோம். நோட்டீஸ் வாங்கி கொண்டு கையெழுத்திட வற்புறுத்தினர். மறுத்துவிட்டோம். தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ரமேஷ் கூறுகையில், 12 பேர் பெயரில் நிலுவையில் உள்ள கடன் தொகையை நாங்களே செலுத்த உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை