மோசடி நிறுவனம் புகார் அளிக்கலாம்
மதுரை: மதுரை கோரிப்பாளையத்தில் ஜீவன் பிராப்பரிட்டி புரமோட்டர்ஸ் இந்தியா லிட்., என்ற நிறுவனம் இயங்கியது. மானாமதுரையைச் சேர்ந்த மரியடேவிட், சிமியோன் கென்னடி, ஞானஜோதி, இருதயம், மாணிக்கம் ஆகியோர் கூட்டாக சேர்ந்து வெளிமாவட்டங்களில் கிளைகளை நடத்தி வந்தனர். பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்தால் முதிர்வு தொகையுடன் இருமடங்கு லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி பொதுமக்களிடம் ரூ. பல லட்சம் பெற்று மோசடி செய்தனர்.இதுதொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். இதனால் இதுவரை புகார் அளிக்காதவர்கள் நேரில் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.