மேலும் செய்திகள்
இலவச நோட்டுகள் வழங்கல்
15-Jun-2025
திருப்பரங்குன்றம் : மதுரை ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் லேபர் பள்ளியில் இலவச நோட்டுகள், எழுது பொருள்கள் வழங்கும் விழா நடந்தது. மன்ற தலைவர் அய்யல்ராஜ் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் முத்துச்செல்வம் வரவேற்றார். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி செயலாளர் ஸ்ரீதர், மாணவர்களுக்கு நோட்டுகளை வழங்கினார். முன்னாள் அறங்காவலர் மகாகணேசன், அரசு பணியாளர்கள் சங்க முன்னாள் மாநில பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, பென்னர் தொழிலாளர் சங்க முன்னாள் தலைவர் ஈஸ்வரன் பேசினர்.மன்ற நிர்வாகிகள் அண்ணாமலை, காளிதாசன், அரவிந்தன் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் வேட்டையார் நன்றி கூறினார்.
15-Jun-2025