மேலும் செய்திகள்
இலவச நோட்டுகள் வழங்கல்
15-Jun-2025
திருப்பரங்குன்றம்: ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் வேடர் புளியங்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுகள், எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. தலைவர் அய்யல்ராஜ் தலைமை வகித்தார். திருநகர் மக்கள் மன்ற துணைத் தலைவர் பொன் மனோகரன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தென்கரை முத்துப்பிள்ளை வரவேற்றார். தொழிலதிபர் மாரியப்பன் நோட்டுகள் வழங்கினார். நிர்வாகிகள் அண்ணாமலை, காளிதாசன், வேட்டையார், அரவிந்தன், கே.பி. விளையாட்டுக் குழுத் தலைவர் பாஸ்கர்பாண்டி பங்கேற்றனர். ஆசிரியர் பூபதி நன்றி கூறினார்.
15-Jun-2025