உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச கண் சோதனை முகாம்

இலவச கண் சோதனை முகாம்

வாடிப்பட்டி : வாடிப்பட்டியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சர்வதேச உரிமைகள் கழகம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.மதுரை மேற்கு மாவட்ட தலைவர் தவமணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் செந்தில்குமார், துணை பொதுச்செயலாளர் ராஜேஷ், அமைப்பாளர் காமராஜ், ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் முத்து வரவேற்றார். மனித உரிமைகள் கழக நிறுவன தலைவர் சுரேஷ் கண்ணன் துவக்கி வைத்தார்.சங்கரா கண் மருத்துவமனை டாக்டர் கோலஸ்ரா தலைமையில் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். வடக்கு மாவட்ட தலைவர் நாகேந்திரன், மகளிரணி அன்னபூரணி, பவானி பங்கேற்றனர். காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் சிவா, செயலாளர் கண்ணன் முகாமை ஒருங்கிணைத்தனர். நகர் தலைவர் விஜயராம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !