உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச கண் சிகிச்சை முகாம்

இலவச கண் சிகிச்சை முகாம்

சோழவந்தான் : தென்கரை ஊராட்சி மன்றம் மற்றும் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை மற்றும் கோ லோகா பிருந்தாவனம் அறக்கட்டளை, மதுரை தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் மஞ்சுளா தலைமை வகித்தார். கலாம் அறக்கட்டளை பொதுச் செயலாளர் நாகு, நிர்வாகிகள் ராஜா, சந்தனராஜா, முள்ளிப்பள்ளம் ஊராட்சி துணைத் தலைவர் ராஜா முன்னிலை வகித்தனர்.ஊராட்சி செயலாளர் முனிராஜ் வரவேற்றார். டாக்டர் சுவேதா தலைமையில் மருத்துவக் குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். துணைத் தலைவர் கிருஷ்ணன் மரக்கன்று வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ