உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச சணல்பை தயாரிப்பு பயிற்சி

இலவச சணல்பை தயாரிப்பு பயிற்சி

அலங்காநல்லுார்: அச்சம்பட்டியில் இ.டி.ஐ.ஐ., அசெஞ்சர், பெட்கிராட் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்களுக்கான ஒரு மாத இலவச சணல்பை தயாரிப்பு பயிற்சி தொடங்கப்பட்டது. பெட்கிராட் நிறுவனர் சுப்புராமன் தலைமை வகித்தார். செயலாளர் அங்குசாமி, முத்துப்பாண்டி வரவேற்றனர். ஊராட்சி செயலாளர் முருகேஸ்வரி விளக்கேற்றினார். வட்டார மேலாளர் அருண்குமார் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக இ.டி.ஐ.ஐ., திட்ட அலுவலர் ஆனந்தசேகர் பங்கேற்றார். சவுத் இந்தியன் பேங்க் நிதி ஆலோசகர் மீனாட்சிசுந்தரி ஆலோசனை வழங்கினார். பயிற்சியாளர் விஜயவள்ளி நன்றி கூறினார். பெட்கிராட் தலைவர் கிருஷ்ணவேணி, துணைத் தலைவர் சுசீலாகுணசீலி, பொருளாளர் சாரல்ரூபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !