மேலும் செய்திகள்
சிறுதானிய உணவு தயாரிப்பு இலவச பயிற்சி
02-Oct-2024
தொழில் பயிற்சி துவக்கம்
11-Sep-2024
மதுரை, : மதுரையில் எஸ்.எஸ்.காலனி, வில்லாபுரத்தில் இலவச தொழில் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் நிறுவனம், பெட்கிராட் அறக்கட்டளை ஏற்பாடுகளை செய்துள்ளன. எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் அலுவலகத்தில் மூலிகை சோப், குளியல் பொடி, சலவை சோப்பு, திரவம், பாத்திரம் துலக்கும் சோப்பு, திரவம், ஷாம்பூ, முக கிரீம், லிப் பாம் தயாரிக்க இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.வில்லாபுரம் மீனாட்சி நகர் அலுவலகத்தில் சிறுதானிய இனிப்பு, கார உணவுகள், மசாலா பொருட்கள் தயாரித்தல், காய்கறி, பழங்கள் பதப்படுத்துதல், ஜூஸ், ஜாம், சாஸ் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றருக்க வேண்டும். 26 நாட்கள் காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை நடைபெறும் சான்றிதழ் வழங்கப்படும். தொழில் துவங்க எஸ்.எஸ்.ஐ. சான்றிதழ், மாவட்ட தொழில் மையத்தின் குடிசைத்தொழில் சான்றிதழ் வழங்கப்படும். அலைபேசி: 90950 54177.
02-Oct-2024
11-Sep-2024