மேலும் செய்திகள்
'ஹோம் நர்சிங்' பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
08-Sep-2025
டெலிகாலிங் இலவச பயிற்சி
31-Aug-2025
மதுரை : மதுரை மஹபூப்பாளையம் சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தில் (சிப்போ), வேளாண் சார்ந்த தொழில் துவங்க இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. ஐதராபாத் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம், சிப்போவுடன் இணைந்து 45 நாள் பயிற்சி அளிக்கிறது. நபார்டு வங்கி மானியமாக 36 சதவீதம் பொதுப் பிரிவினருக்கு, 44 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பெண்களுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ. ஒரு கோடி வரை வங்கிக்கடன் பெற பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறுபவர்களுக்கு தங்குமிடம், உணவு இலவசம். 21 முதல் 60 வயதிற்குட்பட்டோர் சேரலாம். பி.எஸ்சி., தாவரவியல், விலங்கியல், வேதியியல், வேளாண்கலை, தோட்டக்கலை, சுற்றுச்சூழல் அறிவியல், உணவு தொழில்நுட்பம், மீன்வளம், வேளாண் உயிரி தொழில்நுட்பம், விவசாயத்தில் பொறியியல் அல்லது பட்டயப் படிப்பு முடித்து ஓராண்டு ஆன இருபாலர் பயிற்சியில் சேரலாம். விருப்பமுள்ளவர்கள் பாஸ்போர்ட் போட்டோ 2, ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ்கள், பான் அட்டை நகல்களுடன் நாளை(செப்.,15) சிப்போ அலுவலகத்தில் பதிவு செய்யலாம். விவரங்களுக்கு 78715 55825ல் தொடர்பு கொள்ளலாம்.
08-Sep-2025
31-Aug-2025