உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உதவித்தொகையுடன் இலவச பயிற்சி

உதவித்தொகையுடன் இலவச பயிற்சி

மதுரை: மதுரையில் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம், சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தொழில் முனைவோருக்கான ஒரு மாதம், 3 மாதம் திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி நடக்கிறது.களிமண், காகிதக் கூழ் பொம்மைகள் தயாரிக்க ஒரு மாத பயிற்சி, மண்பாண்டி கலைத்திறன்மேம்பாட்டு பயிற்சி மற்றும் சுங்குடி புடவையில் மெழுகு, ஸ்கிரீன் பிரின்டிங், புடவையில் முடிச்சு கட்டுதல் தொடர்பாக 3 மாத பயிற்சி வழங்கப்படும். 18 - 35 வயதுள்ள குறைந்தபட்சம் 8ம் வகுப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும்.பயிற்சியின்போது மாதம் ரூ.12,500 உதவித்தொகை வழங்கப்படும். விருப்பமுள்ளோர், கல்விச்சான்றுகளுடன், 'சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம்', 52, டி.பி.ரோடு, மகபூப்பாளையம்,மதுரை - 16 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு: 0452- 260 2339.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ