உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிறப்பு குழந்தைகளுக்கு  இலவச பயிற்சி

சிறப்பு குழந்தைகளுக்கு  இலவச பயிற்சி

மதுரை : மதுரையில் நேயம் அறக்கட்டளை ஆட்டிசம் ஆரம்ப நிலை பயிற்சி மையம் (சிறப்பு பள்ளி) சார்பில் ஆட்டிசம் பாதித்த 1 முதல் 7 வயது குழந்தைகளுக்கு ஆரம்ப நிலை பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.மதுரை தபால்தந்தி நகர் விரிவாக்கம் எடிசன் தெருவில் செயல்படும் இம்மையம் அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படுகிறது. இந்திய மறுவாழ்வு கவுன்சிலில் பதிவு பெற்ற பயிற்றுநர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இம்மையத்தில் தேசிய மாற்றுத்திறன் அடையாள அட்டை (யு.டி.ஐ.டி.,), முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்வது உட்பட அரசு வழங்கும் அனைத்து பயன்களும் பெற்றுத்தரப்படும் என தலைமையாசிரியை உமா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை