உள்ளூர் செய்திகள்

பவுர்ணமி பூஜை

வாடிப்பட்டி: வாடிப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள சொக்கையா சுவாமி ஜீவ சமாதியில் ஆவணி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி விநாயகர், முருகன், சொக்கையா சுவாமிக்கு பால், இளநீர்,தயிர் உள்ளிட்ட 18 வகையான சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. வண்ண மலர்களால் சுவாமிக்கு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பஜனை பாடல்கள் பாடி பக்தர்கள் கூட்டு வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாக தலைவர் மணிகண்டன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை