உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சா வழக்கு : 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

கஞ்சா வழக்கு : 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

மதுரை : தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் 2018 ஜூன் 1 ல் வாகன சோதனையில் அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 210 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது தெரிந்தது. காரை ஓட்டிய தஞ்சை ஒரத்தநாட்டை சேர்ந்த செந்தில்குமார் 41, பட்டுக்கோட்டை தயேந்திரன் 26 ,ஆகியோரை கைது செய்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கு விசாரணை மதுரை இரண்டாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதி ஏ.எஸ்.ஹரிஹரகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அதில் இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.ஒரு லட்சம் அபராதமும் விதித்தார்.

* தந்தை இறுதி சடங்கில் பங்கேற்க போக்சோ கைதிக்கு அனுமதி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மலையடிபட்டியை சேர்ந்தவர் ஜோசப் ராஜா 49. இவரது தந்தை ஜோசப் செல்லையா நடத்திய சர்ச்சில் பாதிரியராக இருந்தார். 2022ல் வந்த மனநலம் குன்றிய 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் ஜோசப் ராஜாவை கைது செய்தனர்.இவ்வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம், ஜோசப் ராஜாவுக்கு வாழ்நாள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. ஜோசப் ராஜா மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தந்தை ஜோசப் செல்லையா இறந்ததால், அவரது இறுதி சடங்கு இன்று (மே 31) நடக்கிறது. இதில் பங்கேற்க 15 நாட்கள் இடைக்கால ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார்.இந்த மனுவை அவசர வழக்காக நீதிபதிகள் விஜயகுமார், அருள்முருகன் நேற்று விசாரித்தனர். இதையடுத்து நீதிபதிகள், மனுதாரருக்கு அவசர விடுப்பு மே 30 மாலை 6:00 மணி முதல் ஜூன் 1 மாலை 6:00 மணி வரை வழங்கப்படுகிறது. தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ