மேலும் செய்திகள்
தீபாவளி வசூலுக்கு 'மதுவிலக்கு விரிக்குது வேஷ்டி'
30-Sep-2025
மதுரை: மதுரை செல்லுார் கண்மாய் ஓடை அருகில் மீனாம்பாள்புரத்தில் பழமையான அப்பகுதி அடையாளமாக இருக்கும் ஆலமரம் அருகே குப்பைத்தொட்டிகள் அணிவகுத்து நிற்கின்றன. குப்பையை அங்கேயே எரிப்பதால் ஆலமரம் பாதிக்கப்படுவதாக நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் அபுபக்கர் கூறினார். அவர் கூறுகையில், ''செல்லுார் கண்மாயிலும், ஓடைகரையிலும் ஆலமரங்கள் இருந்தன. ஆனால் தற்போது ஒரு ஆலமரம்தான் உள்ளது. அதன் கீழும், சுற்றியும் குப்பை கொட்டி எரிக்கின்றனர். இந்த ஆலமரத்தை நான் கண்ணின் இமைபோல், பிள்ளை போல் பாதுகாத்து வருகிறேன். ஆகையால் மாற்று இடத்தில் குப்பை தொட்டிகளை மாநகராட்சி வைப்பதோடு, குப்பை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
30-Sep-2025