பீச் வாலிபால் போட்டி மாணவிகள் முதலிடம்
அழகர்கோவில், : மதுரை டி.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி நடந்தது. அழகர்கோவில் சுந்தரராஜா பள்ளி மாணவிகள் 14, 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.14 வயதிற்குட்பட்ட மாணவிகள் அணியில் அஸ்வதிஸ்ரீ, வான்மதி, 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் அணியில் சுசீலா, ஷீலா ஆகியோர் விளையாடினர். வெற்றி பெற்ற மாணவிகள்,உடற்கல்வி ஆசிரியர் மச்சராஜா, பயிற்சியாளர்கள் பிரபு, லோகு ஆகியோரை பள்ளிச் செயலாளர் செல்லத்துரை,தலைமை ஆசிரியர் செல்வராஜ், அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் ஹரிப்பிரியா பாராட்டினர்.