சின்மயா மிஷன் சார்பில் கீதை ஒப்புவித்தல் போட்டி
மதுரை: மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் சின்மயா மிஷன் சார்பில் கீதை ஒப்புவித்தல் போட்டி நடந்தது. எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை ஆறு பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. சிமா தொழில்குழும நிர்வாகி பானுமதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மாணவர்கள் பகவத் கீதையை படிப்பதன் அவசியம் குறித்து தினமலர் செய்தி ஆசிரியர் ஜி.வி.ரமேஷ் குமார் பேசினார். பரிசளிப்பு விழாவில் சுவாமி சிவயோகானந்தா பேசுகையில், ஹிந்து கடவுள்களிடம் ஆயுதங்கள் உள்ளது போல மாணவர்களும் நம்பிக்கை, பக்தி ஆகிய ஆயுதங்களை வைத்திருத்தல் அவசியம்; நம்பிக்கையுடன் இறைவனை வணங்குபவர்களுக்கு பரமாத்மாவின் பக்தியும், பாதுகாப்பும் எப்போதும் கிடைக்கும் என்றார். கனரா வங்கி துணைப் பொது மேலாளர் சந்தீப் குமார் சின்ஹா மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். சாய் மகிழ்ந்தன், சாம்வித், தாரா, ஆத்விக் ரங்கன், ஆருத்ரா, ஜெய்தீப் ஆதித்யா, நிரஞ்சனா, கிரிஷ், அனிருத், சுரபி, வம்சிகா ஸ்ரீ, ஜீவா, யோகா தர்ஷன் பரிசுகளை வென்றனர். கீதா ரத்னா விருதை சாத்விகா ஸ்ரீ, அக் ஷித் சரண், அனஹிதா, நீரஜா பெற்றனர். சின்மயா மிஷன் தலைவர் திருமலையப்பன், செயலாளர் குருபிரசாத், நிர்வாகி சுவாமி ஜிதேஷ் சைதன்யா, துணைத் தலைவர் கோபால்சாமி, அறக்கட்டளை உறுப்பினர் ராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி, யுவகேந்திரா உறுப்பினர் தேஜஸ் பிரபு பங்கேற்றனர்.