மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
15-Jul-2025
மதுரை: மதுரையில் அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடந்த அத்துமீறல், அராஜக நடவடிக்கைகளை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சின்னப்பொன்னு தலைமை வகித்தார். முன்னாள் மாநில செயலாளர் சோலையன் துவக்கி வைத்தார்.நிர்வாகிகள் கூறுகையில், ''2002 ல் கலைக்கப்பட்டு, புதுப்பிக்கப்படாத சங்கத்தினர் விருதுநகரில் முறையாக நடந்த சங்கத்திற்குள் புகுந்து சேதப்படுத்தி உள்ளனர்.அவர்கள் போராட்டத்திற்கு அரசு ஊழியர்கள் வராததால் மாணவர்கள், வாலிபர் சங்கங்களைச் சேர்ந்தவர்களை பயன்படுத்துகின்றனர். கம்யூ.,க்கும், அரசு ஊழியர்களுக்கும் என்ன சம்பந்தம் உள்ளதென தெரியவில்லை'' என்றனர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், பாலிடெக்னிக் கல்லுாரி பொதுச் செயலாளர் மனோகரன், அரசு உதவிபெறும் கல்லுாரி மண்டல தலைவர் வீரவேல்பாண்டி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் நுார்ஜஹான் பேசினர். பொருளாளர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.
15-Jul-2025