உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருமால்நத்தத்தில் வீணடிக்கப்பட்ட அரசு நிதி

திருமால்நத்தத்தில் வீணடிக்கப்பட்ட அரசு நிதி

சோழவந்தான் : வாடிப்பட்டி ஒன்றியம் திருவேடகம் ஊராட்சி திருமால் நத்தம் மயானத்தில் சுகாதார வளாகம், தண்ணீர் தொட்டி என அரசு நிதியை வீணடித்துள்ளனர்.நகரி ரோட்டில் உள்ள மயானத்தில் 2014ல் கட்டிய சுகாதார வளாகம், குளியலறை சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. பின் பராமரிப்பின்றி பூட்டப்பட்டு மரங்கள், செடி கொடிகள் அடர்ந்துள்ளன. மயானத்தின் மற்றொரு பகுதியில் சில லட்சம் ரூபாய் மதிப்பில் போர்வெல், குடிநீர் தொட்டி, அருகிலேயே குளியல் தொட்டி கட்டினர். இன்று வரை குளியல் தொட்டிக்கு தண்ணீர் இணைப்பு கொடுக்கவில்லை.இந்நிலையில் குடிநீர் தொட்டியும் பழுதானது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. மாறாக சில ஆண்டுகளுக்கு முன் மேலும் ஒரு குடிநீர் தொட்டி அமைத்தனர். அதுவும் இன்று வரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.இறுதி சடங்குகள் செய்ய சிரமப்படுவதாகக் கூறி அரசு நிதியை வீணடிக்காமல், மயான இடத்தில் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை