உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு விடுதி மாணவர்கள் வாந்தி

அரசு விடுதி மாணவர்கள் வாந்தி

எழுமலை: எம். கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியுடன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மாணவர் விடுதி இயங்கி வருகிறது. இங்கு உத்தப்புரம், கிருஷ்ணாபுரம், டி.பள்ளபட்டி, பாறைப்பட்டி பகுதியைச் சேர்ந்த 15 மாணவர்கள் தங்கிப் படிக்கின்றனர். விடுதிக் காப்பாளராக ரவிநாதன், சமையலராக குருமூர்த்தி உள்ளனர்.நேற்று காலை இட்லி, சட்னி, சாம்பார் சாப்பிட்டு பள்ளிக்கு வந்த மாணவர்கள் 15 பேரும் உணவு ஒவ்வாமையால் வாந்தியெடுத்தனர். உதவித்தலைமை ஆசிரியர் ஆனந்தகுமார் மாணவர்களை எழுமலை ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதித்தார்.உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல், பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டி ஆகியோர் மாணவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தனர். எழுமலை மருத்துவ அலுவலர் விஸ்வநாதபிரபு, சுகாதார அதிகாரிகள் உணவு, குடிநீரை ஆய்வுக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை