உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு ஓய்வூதியர் சங்க விழா

அரசு ஓய்வூதியர் சங்க விழா

திருநகர் : அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க திருப்பரங்குன்றம் கிளை சார்பில் திருநகரில் பொதுக்குழு கூட்டம், ஓய்வூதியர் தினம், டைரி, காலண்டர் வழங்கும் விழா நடந்தது.தலைவர் தனபாண்டியன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் சாந்தி, இணைச்செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் பிச்சுமணி வரவேற்றார். செயலாளர் பன்னீர்செல்வம் அறிக்கை வாசித்தார். பொருளாளர் நடராஜன் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பித்தார். மாவட்ட இணைச்செயலாளர் நாராயணன், துணைத் தலைவர் தினகர்சாமி, பொருளாளர் ஜெயராமன், தலைவர் கிருஷ்ணன் பேசினர். மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் நிறைவுரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் பழனிவேல் நன்றி கூறினார்.70 வயது நிறைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிகளை தி.மு.க., அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை