உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தீபாவளிக்கு முன் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்

தீபாவளிக்கு முன் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்

மதுரை : ''தமிழக அரசு அறிவித்துள்ள 3 சதவீத அகவிலைப்படி உயர்வை, தீபாவளிக்கு முன்பாக வழங்க வேண்டும்'' என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல, தமிழக அரசும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது. பண்டிகை காலம் என்பதால் 1.7.2024 முதல் நிலுவைத் தொகையை இந்த மாதத்திலேயே தீபாவளிக்கு முன்ரொக்கமாக வழங்க வேண்டும்.கடந்த ஜனவரிக்கான அகவிலைப்படி அறிவித்தபோது, ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்., மென்பொருளில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒருமாத காலம் தாமதமானது. இதைத் தவிர்க்க உடனே அந்த மென்பொருளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்க கருவூலத் துறையை முதல்வர் அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சாண்டில்யன்
அக் 29, 2024 20:34

மத்திய அரசு ஊழியர்களுக்கும் பஞ்சப்படி அறிவிப்போடு நின்று விட்டது. இன்று வரை கைக்கு கிடைக்கவில்லை சம்பளமே வழக்கத்தைவிட லேட்டாத்தான் வந்தது மத்திய அரசே "பஞ்சப்பாட்டு"தான் பாடுது 2047 இல் வளர்ந்த இந்தியா காண காத்துக் கிடக்கவும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை