பதிவுத்துறையில் புதிய கட்டடத்திற்கு பூமிபூஜை
மதுரை : மதுரை பொதும்பு, காதக்கிணறு, சாமநத்தம், கருப்பாயூரணி, விளாங்குடி பகுதிகளில் ரூ.14.85 கோடி மதிப்பிலான புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டுமானங்களுக்கு பூமிபூஜை நடந்தது.அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார். அவர் கூறியதாவது: அரசு கட்டமைப்பை மேம்படுத்தி பொதுமக்கள் சேவையை வழங்கும் வகையில் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. இதனடிப்படையில் பொதும்பு, காதக்கிணறு உட்பட 5 இடங்களில் புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் 5365 சதுர அடியில் கட்டப்பட உள்ளது. இதில் அலுவலகம், கணினி அறை, பதிவறை, பல்நோக்கு, மதிய உணவு அறை, காத்திருப்போர் பகுதி, சுகாதார வளாகம் போன்றவை இருக்கும். மிக விரைவில் பயன்பாட்டுக்கு வரும், என்றார்.கலெக்டர் பிரவீன்குமார், பத்திரப்பதிவுத்துறை துணைத் தலைவர் ஆனந்த், செயற்பொறியாளர் காமராஜ், உதவி செயற்பொறியாளர் அருண் உட்பட பலர் பங்கேற்றனர்.