உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிலக்கடலை அறுவடை பணி

நிலக்கடலை அறுவடை பணி

எழுமலை: எழுமலை பகுதியில் மானாவாரியில் பயிரிட்ட நிலக்கடலை அறுவடைப் பணி நடக்கிறது. கடந்த மாதத்தை விட விலை சற்று உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.எழுமலை, உத்தப்புரம், பாறைப்பட்டி, எருமார்பட்டி, ஜோதில்நாயக்கனுார், கோடாங்கிநாயக்கன்பட்டி பகுதியில் மானாவாரியில் பரவலாக நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். இந்தப் பருவத்தில் மானாவாரி பட்டத்தில் போதுமான மழை பெய்யாததால் தாமதமாக நிலக்கடலை பயிரில் தற்போது அறுவடை பணி நடந்து வருகிறது. கடந்த மாதம் கிலோ ரூ.35 க்கு விற்ற நிலக்கடலை ரூ.55 ஆக உயர்ந்துள்ளது. இந்தப் பருவத்தில் நிலக்கடலை சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால் வரத்து குறைவு காரணமாக விலை அதிகரித்துள்ளது.தாடையம்பட்டி ராஜா கூறுகையில், ''பயிர் வளரும் பருவத்தில் காட்டுப் பன்றித்தொல்லை அதிகம் இருந்தது. தோட்டத்தில் பரண் அமைத்து இரவு, பகலாக காவல் இருந்து பயிர்களை பாதுகாத்தோம். கடந்த 15 நாட்களாக கடலை அறுவடைப்பணி நடக்கிறது. முன்பை விட கிலோவுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. மேலும் உயர வாய்ப்புள்ளதால், இரவு பகலாக கண்காணித்தற்கு பலன் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி