உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜி.எஸ்.டி., விளக்கக் கூட்டம்

ஜி.எஸ்.டி., விளக்கக் கூட்டம்

மதுரை: மதுரையில் தொழில் வர்த்தக சங்கம் சார்பில், 56வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட வரி சீர்திருத்தம், குறைவான வரி விகித அடுக்குமுறைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் விளக்கக் கூட்டம் நடந்தது. தலைவர் ஜெகதீசன் வரவேற்றார். பட்டயக்கணக்காளர்கள் சரவணக்குமார், பாலசுப்பிரமணியன் ஆகியோர், ஜி.எஸ்.டி.,யால் கிடைத்துள்ள நன்மைகள், தற்போது குறைக்கப்பட்ட மற்றும் 2 அடுக்காக மாறுதல் செய்யப்பட்ட வரி விகித அடுக்குமுறைகள், அதன் காரணமாக வணிகர்கள், பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து எடுத்துரைத்தனர். சங்க உறுப்பினர்கள், வணிகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். பொருளாளர் சுந்தரலிங்கம், செயலாளர் ஸ்ரீதர், துணைத்தலைவர் செல்வம், இணைச் செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி