உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கும்மி கொட்டி போராட்டம்

கும்மி கொட்டி போராட்டம்

கொட்டாம்பட்டி: க. புதுார் கருப்பாயி ஊருணியில் செயல்படும் கல்குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி பெண்கள் மந்தையில் கும்மி கொட்டி நுாதனமான முறையில் நேற்று இரண்டாம் நாள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்குவாரி அருகே அருவி மலையில் தொல்லியல் துறையினரால் ஆவணப்படுத்தப்பட்ட ஆறு தமிழ் கல்வெட்டுகள், நீரூற்றுகள், வீடுகள், ரோடு, சிவன் கோயில், வரலாற்று சின்னங்கள்உள்ளன. இவற்றை பாதிக்கும் வகையில் விதி மீறி குவாரி செயல்பட அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும். அதுவரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !