பேரையூரில் ஆலங்கட்டி மழை
பேரையூர் :பேரையூர் பகுதியில் நேற்று மாலை ஆலங்கட்டி மழை பெய்தது. நேற்று முன்தினம் மாலை 21 மி.மீ., மழை பெய்தது. இரண்டு மாதமாக வெயில் வாட்டிய நிலையில் மழை பெய்து இப்பகுதியை குளிர்வித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இம்மழைக்கு டி.கல்லுப்பட்டியில் ஒன்றரை ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட வாழை சேதமடைந்தது. கவசக்கோட்டையில் ஒரு வீடு இடிந்தது.