உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கைப்பை ஒப்படைப்பு

கைப்பை ஒப்படைப்பு

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் நடைமேம்பாலத்தில் நேற்று காலை கைப்பை ஒன்று கிடந்தது. அதனை ரயில்வே ஊழியர் லட்சுமணன், பாதுகாப்புப் படை (ஆர்.பி.எப்.,) போலீசாரிடம் ஒப்படைத்தார். அதில், இரு ஐபோன்கள், ரூ.1710 ரொக்கம், ராமேஸ்வரம் செல்வதற்கான இரு முன்பதிவில்லா டிக்கெட்டுகள் இருந்தன. விசாரணையில், எஸ்.எஸ்.காலனி நளினி, நடைமேம்பாலத்தில் பையை தவற விட்டது தெரிந்தது. உரிய சரிபார்ப்பிற்கு பின் அவரது மகன் ஸ்ரீசிதம்பரத்திடம் எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ