ரூ.54 ஆயிரம் ஒப்படைப்பு
மதுரை: ராமநாதபுரம் புதுமடத்தைச் சேர்ந்தவர் முஹமது கான் 43. மதுரை ரயில்வே ஸ்டேஷன் முதலாவது பிளாட்பாரத்தில் நாகர்கோவில் - பெங்களூரு ரயிலில் செல்ல காத்திருந்த போது பர்ஸை தவறவிட்டார். ரோந்து சிறப்பு எஸ்.ஐ., ஹுமாயூன் தலைமையிலான போலீசார் பர்ஸை மீட்டு அறிவிப்பு வெளியிட்டனர். இதைகேட்டு முஹமது கான் உரிய ஆவணங்களை காட்டி ரூ.54 ஆயிரம், ஏ.டி.எம்., கார்டு, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்டார்.