கழிவுநீரில் முகம் கழுவிய சுகாதார அலுவலர்
திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி பாண்டியன் நகர் கசடு மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படுகிறது. ஏற்கனவே உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் கசடு காரணமாக நிலத்தடி நீர் மாசடைந்து உள்ளதாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று சுகாதார வளாகத்திற்கு கழிவு நீர் ஏற்றி வந்த லாரிகளை வழிமறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த நகராட்சி சுகாதார அலுவலர் சிக்கந்தர், லாரி கழிவு நீரில் முகத்தை கழுவி, கழிவுநீரை முகர்ந்து பார்க்குமாறு மக்களிடம் கூறினார். இதனால் பொதுமக்கள் முகம் சுளித்தனர்.