உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

மதுரை மாநகராட்சி கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

மதுரை: மதுரை- திண்டுக்கல் சாலையில் விபத்து தடுப்பு நடவடிக்கையாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுத்த மாநகராட்சி கமிஷனருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டை பதிவு செய்தது.பரவை செந்தில்குமார், 'திண்டுக்கல் சாலை சமயநல்லுார், பரவை பகுதியில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத்துறை, மதுரை எஸ்.பி.,க்கு உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார். ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் ஆகியோர் நவ.29ல் அச்சாலையை ஆய்வு செய்தனர். இந்த நீதிபதிகள் முன்பு நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. மதுரை மாநகராட்சி தரப்பு: பாத்திமா கல்லுாரி முதல் மாநகராட்சி எல்லையான பரவை சோதனைச்சாவடிவரை சாலையின் நடுவில்தெருவிளக்குகள் அமைக்கப்படும். இதற்கான டெண்டர் ஜன.3ல் நடைபெறும். இவ்வாறு தெரிவித்தது. நீதிபதிகள்: விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி கமிஷனரை இந்நீதிமன்றம்பாராட்டுகிறது. பரவை பேரூராட்சிக்குட்பட்ட எல்லை முதல் சமயநல்லுார் ஊராட்சிக்குட்பட்ட 4.2 கி.மீ.,துார சாலையின் நடுவில் தெருவிளக்குகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை தடையில்லாசான்று அளித்துள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு தமிழக அரசிடம் நிலுவையில் உள்ளது. இதன் மீது அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும். விசாரணை ஜன.6க்கு ஒத்திவைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ