டாக்டரை நியமிக்க உத்தரவிட முடியாது உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை: மதுரை அய்யனன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: திருவாதவூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் டாக்டர், சுகாதார ஆய்வாளர் மற்றும் நர்ஸ் பணி யிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர், துணை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: டாக்டரை நியமிப்பது அத்துறையின் நிர்வாக விவகாரம். அரசு துறையின் அன்றாட நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆரம்ப சுகாதார மையங்களில் டாக்டர்கள் இருப்பதை அரசு உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதித்துறையின் அதி காரத்தை பயன்படுத்தி ஒரு டாக்டரை நிரந்தரமாக நியமிக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது. இருப்பினும் இப்பிரச்னைகளை அத்துறை பரிசீலிக்கலாம். மனு தள்ளுபடி செய்யப் படுகிறது. இவ்வாறு உத்தர விட்டனர்.