வாக்காளர் அட்டையுடன்ஆதார் இணைக்க வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்க தாக்கலான வழக்கில் தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.உடன்குடி சிவமுருக ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு:வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதன் மூலம் போலி வாக்காளர்களை நீக்க முடியும். ஒவ்வொருவரும் ஒரு ஓட்டு மட்டுமே பதிவு செய்ய இயலும் என்பதை உறுதி செய்ய முடியும். அதே நபர் ஒரு தேர்தலில் மீண்டும் ஓட்டுப் பதிவு செய்யும் அபாயம் நீங்கும்.ஒருவர் வெவ்வேறு தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்தால் எளிதாக கண்டறிய முடியும். வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதை கட்டாயமாக்க வலியுறுத்தி இந்திய தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு மத்திய பொதுத்துறை (தேர்தல் பிரிவு) செயலர், இந்திய தலைமை தேர்தல் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு மார்ச் 20க்கு ஒத்திவைத்தது.