உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / லஞ்சம் வாங்கிய போலீசார் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு

லஞ்சம் வாங்கிய போலீசார் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை; திண்டுக்கல்லில் திருட்டு வழக்கு விசாரணை தொடர்பாக லஞ்சம் கேட்ட மற்றும் வாங்கிய போலீசார் மீது வழக்குப் பதிய லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனு:எங்கள் வீட்டில் 2024 ல் 80 பவுன் நகை, ரூ.3 லட்சத்து 23 ஆயிரம் ரொக்கம், ரூ.8 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் திருடுபோயின. திண்டுக்கல் மாவட்ட தாலுகா போலீசார் வழக்குப் பதிந்தனர். ஒருவர் கைது செய்யப்பட்டடு, 25 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கணவரிடம் பெட்ரோல் பங்கில் போலீசார் லஞ்சம் கேட்டு வாங்கினர். திருட்டு வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை. விசாரணையை வேறு அமைப்பிற்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன்: மனுதாரர் கணவரின் பெட்ரோல் பங்கிற்குள் தாலுகா போலீசார் சட்டவிரோதமாக நுழைந்து லஞ்சம் வாங்கியது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்நீதிமன்றத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. மனுதாரர் சமர்ப்பித்த மின்னணு ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் சரிபார்த்தனர். குற்றச்சாட்டில் உண்மை, முகாந்திரம் உள்ளது உறுதியானது. லஞ்சம் கேட்ட மற்றும் வாங்கிய போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிய வேண்டும். விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்.திருட்டு வழக்கில் நகைகள் மீட்கப்பட்டது தொடர்பாக தாலுகா போலீசாரிடம் முறையாக கணக்கு இல்லை. மனுதாரர் வீட்டில் திருட்டு நடந்தது தொடர்பாக தாலுகா போலீசார் பதிந்த வழக்கின் விசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்படுகிறது. விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ